நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- இரு பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
1 min read
Holiday for all schools tomorrow – Anna University exams cancelled
28.11.2025
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.