மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் தொழிற்சாலை: முதல்வர் திறந்து வைத்தார்
1 min read
Chief Minister inaugurates factory manufacturing front-cover glass for electronic devices
5.12.2025
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1,003 கோடி முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் (Bharat Innovative Glass Technologies Private Limited BIG TECH) நிறுவனம் இதனை நிறுவியுள்ளது.
இந்த நிலையில் இந்த மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.