August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகிரி இளம்பெண் மரணத்தில் சந்தேகம் – ஆட்சியரிடம் புகார் மனு

1 min read

Suspicion in the death of a young woman in Sivagiri – Complaint filed with the Collector

5.12.2025
சிவகிரியில் இளம்பெண் இறந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தந்தை மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் அரியப்புரம் பகுதியை சேர்ந்த பொன் ஆனந்தி(26) என்பவர்க்கும் சிவகிரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் 2022 திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பொன் ஆனந்தி நேற்றைய முன்தினம் தனது கணவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பொன் ஆனந்தியின் தந்தை சொரிமுத்து மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது மகள் இறப்பு விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக கூறி புகார் மனு அளித்துள்ளனர். தனது மகளின் கணவர் வீட்டில் தொடர்ந்து தனக்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதாக கூறி அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்துள்ளார். இருந்தாலும் மகளின் வாழ்க்கையை கருதி சமரசம் செய்து அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் அவள் இறந்த விவகாரம் தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவே தனது மகளின் கணவர் மற்றும் அவரது மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *