கடையம் வனப்பகுதியில் மிளா வேட்டையாடியவர் கைது
1 min read
Person wanted in Sambar deer poaching case arrested
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள சிவசைலம் வனப்பகுதியில் மிளா வேட்டையாடிய வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவசைலம் பிரிவில் உள்ள முள்ளிமலை பொத்தைப் பகுதியில் மிளாவை (கடமான்) வேட்டையாடிய வீராணத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
துணை இயக்குனர் அன்பு இ.வ.ப. (கூ. பொ) உத்தரவின்படி, கடையம் வனச்சரகர் ஜெயபிரகாஷ் மற்றும் வனப் பணியாளர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மேற்படி குற்றச் செயலில் தலைமறைவாக இருந்து வந்த வனத்துறையினரால் தேடப்பட்ட குற்றவாளியான தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் தாட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்ரமாதித்தன் என்ற வட்டி என்பவரை கைது செய்து தென்காசி நீதிமன்ற நடுவர் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.