அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது-பிரதமர் மோடி புகழாரம்
1 min read
Ambedkar’s dedication guides us – PM Modi praises
6.12.2025
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அம்பேத்கரின் தலைமைத்துவம், நீதி, சமத்துவம், அரசமைப்பு மீதான அர்ப்பணிப்பு நம்மை வழி நடத்துகிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்வோம். கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை தூண்டியவர், வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.