June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூரில் இலவச மருத்துவ முகாம்-ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்

1 min read

Free medical camp in Avudaiyanur – R.S. Bharathi inaugurated

8/12/2025
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி ஆவுடையானூரில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் மாவட்ட மருத்துவர் அணி சார்பில் ஆவுடையானூரில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணை செயலாளரும், தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான டாக்டர் கலைகதிரவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜெ.கே.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் தொகுப்புரை ஆற்றினார்.

திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இம்முகாமில் மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் இரா.சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, தர்மராஜ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, தொகுதி அமைப்பாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சேக்முகமது, சுரண்டை நகர செயலாளர் கணேசன், நி;;ர்வாகிகள் சொட்டு சுப்பிரமணியன், ரவி, செந்தூர் முருகன், ராஜேந்திரன், சமுத்திரபாண்டி, தங்கராஜ், டால்டன், முத்துகுட்டி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவர்கள் தமிழரசன், அன்பரசன், செல்வரெங்கராஜு, தமிழருவி, அரவிந்த் மேனன், விக்னேஷ், அருள்விஜயகுமார், தேவிஸ்ரீ, கௌதமி உள்ளிட்டோர் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள்,மருந்துகள், மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *