June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

போலீசாரிடம் வாக்குவாதம்: எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

1 min read

Argument with police: Case registered against H. Raja under 3 sections

9.12.2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு கடந்த 4-ந்தேதி பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு இருப்பதால் அங்கு செல்ல அனுமதிஇல்லை என்று கூறி அவரை போலீசார் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் எச்.ராஜா வாகனத்தில் ஏற மறுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னை போலீஸ் வாகனத்தில் ஏற்றுவதற்காக உரிய காரணத்தை எழுத்துப்பூர்வமாக தருமாறு கூறினார். அவருக்கு ஆதரவாக ஏராளமான பா.ஜனதாவினர் அங்கு குவிந்தனர்.

அப்போது எச்.ராஜாவை அவரது காரிலே அமர போலீசார் சம்மதித்தனர். ஆனால் மதுரைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை கோர்ட்டு நீக்கியதாக தகவல் வந்ததையடுத்து எச்.ராஜாவை திருப்பரங்குன்றம் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

இந்நிலையில் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *