June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கான”கபீர் புரோஸ்கார் விருது”

1 min read

“Kabir Proskar Award” for Social Harmony in Tenkasi District

11.12.2025
தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது. ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசு பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர்.
இவ்விருதானது. ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர் களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது தலா ரூ.20,000/- ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கு தென்காசி மாவட்டத்தை சார்ந்த தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பித்திட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மேல பாட்டக்குறிச்சி, தென்காசி என்ற முகவரியில் நேரிலோ (அ) 04633-212580 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்
கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *