தென்காசி ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியர்கள்
1 min read
Court staff go to confiscate Tenkasi Adi Dravidar Welfare Office – stir
11.12.2025
தென்காசியில் தனிநபர் நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரத்தில், தென்காசி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற் பட்டது.
தென்காசி அருகே உள்ள மேலகரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட் டது. இந்த நிலையில் அந்த நிலமானது அப்பகுதியை சேர்ந்த செல்லப் பெருமாள் திரிகூடராசப்பன், ஈஸ்வரன், கோமதி, சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு சொந்தமானது என்று கூறி, அவர்கள் தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, நிலத்தின் உரிமையாளர் களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும் தள்ளுபடியான நிலையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தற்போதைய மதிப்பீட்டில் ரூபாய் .85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறப்படும் நிலையில், இதுவரை ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் எந்தவிதமான இழப்பீடும்
நிலத்தின் உரிமையாளர் களுக்கு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை
அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று நீதிமன்ற அலுவலகப் பணியாளர்கள் தென்காசி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர். இழப்பீடு கோரிய
5 பேரும் அங்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்குள்ள அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மேலும் ஒருமாதகால அவகாசம் கோரினர். அவர்களின் அவகாசத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்ற பணியாளர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.