August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

ஹிஜாப் அகற்றிய விவகாரம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செயலுக்கு ஆதரவுக்குரல்

1 min read

Hijab removal issue: Voice of support for Bihar Chief Minister Nitish Kumar’s action

17/12/2025
பீகாரில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பீகார் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள ‘சம்வாத்’ என்ற இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு (ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், ஹிஜாப் அணிந்து நியமனக் கடிதத்தைப் பெற மேடை ஏறினார். அப்போது, மேடையில் நின்றிருந்த முதல்வர் நிதிஷ்குமார், “என்ன இது?” என்று கூறி அவரது ஹிஜாபைக் கீழே இறக்கினார்.

நிதிஷ் குமாரின் பின்னால் நின்று கொண்டிருந்த பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதலமைச்சரைத் தடுக்க முயன்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சர்சையையான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் நிஷாத அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,” அவர் ஹிஜாபை இழுக்கவில்லை, நியமனக் கடிதம் சரியான நபருக்கு வழங்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க அதை இழுத்துள்ளார்.

இந்த விவகாரத்தை மக்கள் பெரிதாக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரும் ஒரு மனிதர், அவரை யாரும் வேட்டையாடக்கூடாது… ஹிஜாப்பை தொட்டது இவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியது என்றால், வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்று நேர்காணலின் போது அமைச்சர் சிரித்துக் கொண்டே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நிஷாத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்திடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்,” இந்த வெட்கக்கேடான வார்த்தைகளை உத்தரப் பிரதேச அரசு அமைச்சர் சஞ்சய் நிஷாத் சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் இதைச் சொல்லும் விதமும், அந்த நயவஞ்சகச் சிரிப்பும் அவரது இழிவான, அபத்தமான மற்றும் பெண் வெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது,” என்றார்.

கண்டனங்கள் வலுக்கும் நிலையில் சஞ்சய் நிஷாத் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர்,” அந்த கருத்துகளை நான் சிரித்துக்கொண்டே, சாதாரணமாக, எனது உள்ளூர் போஜ்புரி வட்டார மொழியில் கூறினேன். எந்தவொரு சமூகம், எந்தவொரு பெண் அல்லது எந்தவொரு மதத்திற்கும் எதிராக எந்தத் தீய நோக்கமும் இல்லை, அவமதிக்கும் எண்ணமும் இல்லை,” என்றார்.

இருப்பினும், ஹிஜாப் சர்ச்சை வீடியோ வைரலானதை தொடர்ந்து, நிதிஷ் குமார் மற்றும் சஞ்சய் நிஷாத் மீது லக்னோவின் கைசர்பாக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுமையா ராணா, தனது வழக்கறிஞர்களுடன் சென்று, அந்த இரு தலைவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரை அளித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *