தென்காசி மாவட்ட பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
1 min read
Tenkasi District Public Distribution System Monitoring Committee Meeting
17.12.2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர. தலைமையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர பாதுகாப்புஅலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் நுகர்வோர் நலன் கறித்தும், நுகர்வோர் நலன்களைமேம்படுத்தும பொருட்டுநடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்து கூட்டத்தல் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு.சிவகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் நா.அழகப்பராஜா, தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்