June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தற்கொலை செய்த முருக பக்தர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்-பாஜக வழங்கியது

1 min read

Tributes paid to the body of the person who committed suicide over the Thiruparankundram Deepam

19.12.2025
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதியான முருக பக்தர் பூர்ணசந்திரன் 40, மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
அவரது உடலை மீட்ட போலீசார் மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

பூர்ண சந்திரன் மரணத்துக்கு, பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பிறகு கூறியதாவது:

பூர்ண சந்திரனின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. நேற்று முதல் இந்த துக்கம் தமிழர்களின் தொண்டையை அடைக்கிறது. தர்மத்திற்காக வாழ வேண்டுமே தவிர தர்மத்திற்காக இறக்கக்கூடாது. அதை பா.ஜ. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது, என்றார்.
பாஜக மாநித்தலைவர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். மேலும் பூரணசந்திரன் குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடைய இறந்த பூரணசந்திரன் உடலுக்கு இந்துமுன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *