ஆவுடையனூர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டஇடம் வழங்கிய பொதுமக்கள்
1 min read
Avudayanur: Public provides land for construction of overhead water tank
25/12/2025
தென்காசி மாவட்டம், கிழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
ஆவுடையானூர் ஊராட்சியில் பொடியனூர்பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்க கூடுதலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிகட்ட இடம் தேவைப்பட்டது.அதற்கு போதுமான அரசு நிலம் இல்லாமல் அந்த பணியை மேற்கொள்ளமுடியாமல் இருந்து வந்தது.
இந்தநிலையினை அறிந்த பொடியனூர் மக்கள் ஊருக்காக எடுத்து வைத்திருந்த 30-செண்ட் நிலத்தில் 1 1/4 செண்ட் நிலத்தை ஊராட்சிக்கு வழங்க முடிவு செய்து அரசு பெயருக்கு ஆவணத்தை உருவாக்கி அதனை இன்று ஊராட்சி மன்றத்திற்கு வழங்கினார்கள். ஆவுடையானூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கு.செல்லப்பா முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மு.மகேஸ்வரி யிடம் ஆவணத்தை வழங்கும் நிகழ்ச்சி இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆவணத்தை பொடியனூர் பொதுமக்கள் சார்பில் திரு.தங்கப்பழம் நாடார் தலைமையில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பெருநிலக்கிழார் கு.நாராயணசாமி, எஸ்.டி.கணேசன், நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் துணை தலைவர் வே.சுப்பிரமணியன், சிவன் பாண்டியன், டி.பி.முருகன் ஜெயபால் பி.இரமேஷ் ஆர்.பௌர்ணமிராஜா ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இராம உதயசூரியன், ஊராட்சி துணை தலைவர் செல்வமேரி கம்யூனிஸ்டு முருகன், கோட்டைவிளையூர் கணபதிநாடார், தென்றல் முருகன், ஊராட்சி அலுவலக பணியாளர் மேரி, ஊராட்சி உதவியாளர் பெருமாள்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.