June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்தளம்பாறையில் தேசிய விவசாயிகள்தின விழா

1 min read

National Farmers’ Day celebration in Mattalambarai

27.12.2025
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் வேளாண்மை கல்லுரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தேசிய விவசாயிகள் தினம் மத்தளம்பாறை கிராமத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மத்தளம்பாறை கிராம நிர்வாக அலுவலர், கிஷ்ணவேணி, ஆயிரப்பேரி கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் தென்காசி வேளாண் அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கபழம் வேளாண்மை கல்லூரி முதல்வர்,முனைவர், ஏ. ராமலிங்கம் அறிவுறுத்த லின் படியும், உதவி பேராசிரியர்கள் முனைவர் ரீபா ஜாக்கப், ஒருங்கிணைப் பாளர்கள் உதவி பேராசிரியர்கள் சிவப்பூரணி மற்றும் ஸ்ரீமௌலி வழிநடத்தலுடன் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவிகள் 8 பேர்(அஜிதா ஸ்வீட்டி ரா. கி, அஸ்வினி ரா, பிருந்தா மு, திவ்ய வசுந்தரா ஆ, எஸ்தர் ஞான பாக்கியா வி, இளந்தமிழ் பி, கற்பகவள்ளி இரா, மதுவினி செ) தென்காசி வட்டாரத்தில் தங்கி இருந்து முன்னோடி விவசாயிகளோடு அனுபவ ஆற்றலைப் பெற்று வருகின்றனர்.

இப்பாடப்பிரிவில் ஒரு பகுதியாக தேசிய விவசாயிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.வேளாண் மாணவி கற்பகவள்ளி இரா. வரவேற்பு உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மின்சாரம் இல்லாமல் குறைந்த செலவில் செமிக உகந்த வகையில் ‘ஜீரோ எனர்ஜி கூலிங் சேம்பர் என்ற தொழில்நுட்பம் செயல்முறை விளக்கமாக செய்யப்பட்டது. விவசாயி களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.
முடிவில் வேளாண் கல்லூரி மாணவி ஆ.திவ்ய வசுந்தரா அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *