June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

1-ந்தேதி முதல் பொதிகை, செந்தூர், முத்துநகர் உள்பட 22 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு

1 min read

Speed ​​of 22 trains including Pothikai, Senthur, Muthunagar increased from January 1

30.12.2025
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜனவரி 1-ந் தேதி முதல் கீழ்க்கண்ட மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் பயண நேரம் 5 நிமிடம் முதல் 85 நிமிடம் வரை மிச்சப்படும்.

அதன்படி, சென்னை சென்டிரல் – நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20 நிமிடம் குறையும்), சென்னை சென்டிரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் (15 நிமிடம் குறையும்), சென்னை சென்டிரல் – டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (5 நிமிடம் குறையும்), சென்னை சென்டிரல் – போடிநாயக்கனூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (5 நிமிடம் குறையும்), நிஜாமுதீன் – சென்னை சென்டிரல் ராஜதானி எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), நிஜாமுதீன் – சென்னை சென்டிரல் துரந்தோ எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்),

ராமேசுவரம் – சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), தாம்பரம் – மதுரை மகால் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (5 நிமிடம் குறையும்), கொல்லம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (85 நிமிடங்கள் குறையும்), நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (45 நிமிடங்கள் குறையும்) ஆகிய ரெயில்களின் வேகம் அதிகரிகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *