பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் 36 ம் ஆண்டு பொது பூஜை
1 min read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0035,0.0007; brp_del_sen:0.1000,0.1000; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 227.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 36;
36th Annual Public Pooja at Pavur Chattaram Vennimalai Murugan Temple
1.1.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் திருமுருகன் திருச்சபை, திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் 36ம் ஆண்டு பொது பூஜை பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் பொது பஜனையும், சக்தி பூஜையும் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். தொடர்ந்து வென்னிமலை முருகனுக்கு சிறப்பு தீப அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை குருசாமி காந்திராமன், துணை குருசாமிகள் திராவிடமணி, நாராயணன் சந்திரமோகன், ஹரிகிருஷ்ணன், சேகர்,கண்ணன் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.