எஸ்.ரகுபதியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி
1 min read
Supreme Court dismisses election petition against S. Raghupathy’s victory.
7/10/2026
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றிக்கு எதிரான வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்று த.வெ.க. வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரசாந்த்குமார் மற்றும் ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தநிலையில், அந்த மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.