தென்காசி அருகே பைக் மீது கார் மோதி காவலர் பலி
1 min read
Policeman killed after car hits bike near Tenkasi
3.1.2026
தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் இது பொலிரோ கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மற்றும் அவரது மகன் பலி காவலரின் மனைவி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கண்ணன் என்பவர் தனது குடும்பத்தினரோடு கடையநல்லூர் துரைச்சாமிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது எதிரே வந்த பொலிரோ கார் மோதியதில் அவரது 5 வயது மகன் சம்பவ இடத்திலே பலி. காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி. அவரது மனைவி தென்காசி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் மீது மோதிய பொலிரோ காரை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.