June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி வித்யாலயா பள்ளியில் 54 வகுப்பறைகள் காட்டும்பணி-முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

1 min read

Chief Minister inaugurates 54 classrooms at Sri Parasakthi Vidyalaya School, Courtallam

3.1.2026
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தென்காசி மாவட்டம். குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீபராசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ரூ.16.48 கோடி மதிப்பீட்டில் 54 வகுப்பறைகள் கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீ குமார், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், உதவி ஆணையர் ஆறுமுகம், அறங்காவலர் முருகேசன். உறுப்பினர்கள் ஸ்ரீதர், சுந்தர்ராஜன், இராமலட்சுமி. வீரபாண்டியன். ஸ்ரீ பராசக்தி கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *