தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள்
1 min read
Various development works underway in Tenkasi district
6.1.2026
தென்காசி மாவட்டத்தில், குத்துக்கல்வலசை பாட்டப்பத்து, குணராமநல்லூர், மேலப்பாவூர், குறிப்பன்குளம் ஆகிய பகுதிகளில் நேற்று தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணிநூல் துறை ஆணையாளர் இரா.லலிதா. பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்றையின் சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகத்திற்கான கட்டடம் கட்டும் பணி நடை பெற்று வருவதையும், முதலமைச்சரின் கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.94.52 இலட்சம் மதிப்பீட்டில் பாட்டப்பத்து முதல் நன்னகரம் வரை நடைபெற்று வரும் சாலைப்பணிகளையும்’
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குணராமநல்லூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் 1 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் (2024-2025) இன்கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினையும், அருந்ததியர்புரத்தில் ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினையும், மேலப்பாவூர் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் (2024 2025) இன் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வரும் பணிகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத்திட்டத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளையும், கலைஞரின் கனவு இல்லம் (2025-2026) இன் கீழ் ரூ.31இலட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வரும் பணிகளையும்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிப்பன்குளம் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்ரூ.64.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆலங்குளம் நெட்டூர் சாலை முதல் கீழ பட்டமுடையார்புரம் வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், நல்லூர் கிராமத்தில் நியாயவிலைக் கடையில் பணியாளர்கள் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று மாதந்தோறும் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணிநூல் துறை ஆணையாளர் இராலலிதா. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.