மதுரையில் தென்மண்டல காவல்துறை ஐ.ஜியாக விஜயேந்திர பிதாரி பொறுப்பேற்பு
1 min read
Vijayendra Bidhari takes charge as IG of Southern Zone Police in Madurai
6.1.2026
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியிலுள்ள தென்மண்டல காவல்துறை ஐஜி அலுவலகத்தில் தென் மண்டல காவல்துறை ஐஜியாக விஜயேந்திர பிதாரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியிலுள்ள தென்மண்டல காவல்துறை ஐஜி அலுவலகத்தில் மதுரை டிஐஜி அபினவ்குமார், மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஐஜி விஜயேந்திர பிதாரி :
தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது, குற்றசம்பவங்களை குறைப்பது குறித்து அனைத்து மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்,
கந்துவட்டி, போதைப்பொருள் விற்பனை, மணல் கொள்ளை போன்றவற்றை தடுக்க தீவிரமாக பணியாற்ற வுள்ளோம், குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றம் மூலமாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவோம்,
பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து சைபர்கிரைம், பொருளாதார மோசடி போன்ற புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்ள்கள் விற்பனையை தடுக்க தொழில்நுட்பத்தினை பயன்படுத்த ஆலோசனை நடத்தவுள்ளோம்,
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காவல்துறை உயரதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதிகமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படக்கூடிய காவல் நிலையங்களில் குற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து அந்த காவல் நிலையங்களை மாதிரி காவல் நிலையங்களாக மாற்றப்படும் எனவும்
காவல்துறையினர் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மன்னிப்பே கிடையாது என தெரிவித்தார்
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களை பயன்படுத்தி மோதலை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிடுவோர் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு?
இதுபோன்ற சமூகவலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்
கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படக்கூடிய குற்றவாளிகளுடைய சொத்துக்களை மீட்பது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.