தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள்
1 min read
Voting machine verification work in Tenkasi district
12.1.2026
தென்காசி மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வைப்பறையில் வைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவன பொறியாளர்களால் 11.12.2025 முதல் 09.01.2026 வரை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் Ballot Units 2848, Control Units 2466 0 2551 VVPAT முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் Ballot Units 2814, Control Units 2372 மற்றும் 2393 VVPAT (இயந்திரங்கள் தகுதியுள்ளதாகவும், Ballot Units 34, Control Units 94 158 VVPAT அடையாளம் காணப்பட்டு பெங்களூரு பிஇஎல் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயன்பாட்டிற்காக 118 (Ballot Units 118, Control Units 118 VVPAT 118) ஒதுக்கீடு செய்யப்பட்டு தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 70 வாக்குப்பதிவு இயந்திரங்களும், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு 48 வாக்குப்பதிவு இயந்திரங்களும் காவல் துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது
இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் விபரம் அனைத்தும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.