June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

1 min read

Road safety awareness rally in Tenkasi

12.1.2026
தென்காசி புதிய பேருந்து நிலைய பகுதியில் இன்று (12.012026) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு தொடர்பான இருசக்கரவாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர தெரிவிக்கையில்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா (01012026 முதல் 31.012026 வரை) முன்னிட்டு சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு தொடர்பாக இருசக்கர வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி சக்திநகர், குத்துக்கல்வலசை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில், தலைக்கவசம் உயிர்க்கவசம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுமக்கள் போக்குவரத்துத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைவிதிகளை பின்பற்றி யிரை காத்திடும் வகையில் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தென்காசி வட்டார போக்குவரத்து அலுலவர்கள் சரவணபவன் (தென்காசி).செல்வி(சங்கரன்கோவில்). ஆய்வாளர்கள் ராஜசேகரன், ராஜன். கனகவல்லி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *