மாட்டுப் பொங்கல் வைப்பது எப்படி?
1 min read
How to celebrate Cow Pongal?
14.1.2026
தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடு வளர்ப்பவர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடலாம். இந்த ஆண்டு 16&1&2026 வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் வருகிறது. இந்த ஆண்டு மாட்டுப்பொங்கலுக்கு தனி சிறப்பு உள்ளது. அன்றைய தினம் பிரதோஷம் இணைந்து விருகிறது. பிரதோஷம் அன்று காளையின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று நடமாடுவதாக கூறப்படுகிறது. எல்லா சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு உண்டு. பிரதோஷம் அன்று நந்திக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடக்கும். மாட்டுப்பொங்கல் என்பதும் மாடுக்கானது. எனவே மாட்டுப்பொங்கல் பிரதோஷத்தோடு இணைந்து வருகிறது. மேலும் அன்றைய தினம் மாத சிவராத்திரியும் இணைந்து வருகிறது.
அன்றை தினம் மாட்டை குளிப்பாட்ட வேண்டும். அந்த தண்ணீரில் வில்வ இலை, வெட்டி வேர், சிவப்பு பூசணி பூ, முந்தைய நாள் பொங்கலுக்கு பூஜை செய்த பூக்கள் மற்றும் பன்னீர் கலந்து அதைக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். அதன்பின் மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி மாட்டை அலங்கரிக்க வேண்டும். பின்னர் மாட்டுக் கொட்டடகையை சுத்தம் செய்து 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் அடுப்பு வைத்து பொங்கல் வைக்க வேண்டும். அப்போது மாடுகளை வணங்க வேண்டும். பூஜை பின்னர் பூசணி இலையில் பொங்கல் கொடுக்க வேண்டும். மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கடகம் லக்கினம், சுக்கிர ஓரையில் மாட்டை வீதிக்கு அழைத்து சென்று கோவிலுக்கு செல்ல வேண்டும். அதன்பின் மாட்டை வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அப்போது மாடு கோமியம் அல்லது சாணமிட்டால் அது மிகவும் நல்லது.