June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பொங்கல் வைத்து வழிபட வேண்டிய நேரம்

1 min read

Time to worship Pongal

14/1/2-026
தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம். அன்றிலிருந்து உத்தரயாண காலம் தொடங்குகிறது. சூரியன் தென் திசையில் இருந்து வடதிசை நோக்கி மெதுவாக நகர்வார். ஓராண்டில் வடதிசை சென்று மீண்டும் தென் திசைக்கு வந்துவிடுவார். தை மாதம் முதல்நாள் அவர் தென் திசையின் எல்லையில் இருப்பார். அன்று முதல் வடக்கு நோக்கி நகர ஆரம்பிப்பார்.
இந்த நாள் ஒரு புண்ணிய காலம். தைப் பொங்கல் தமிழர்களின் தலையாய திருநாள். உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள். வானவியல் ரீதியிலும் இந்த நாள் முக்கியமான நாள்.
தைத் திங்கள் 1 &ம் நாள் (15&1&2026) வியாழக்கிழமை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுக்கிர ஓரையில் புது அடுப்பு அமைத்து பொங்கல் வைத்து சூரியனை வழிபட வேண்டும்.
இந்த விசுவாவசு ஆண்டில் மார்கழி 30&ந் தேதி (14.1.2026) புதன் கிழமை மாலை 6.45 மணிக்கு தை மாதம் பிறக்கிறது.

15&ந் தேதி பொங்கல் வைக்கும்போது, மஞ்சள் குங்குமம் வைத்து, மஞ்சள் கொத்தில் உள்ள மஞ்சள் கொம்பை நூல் கயிற்றில் கங்கணமாக தயாரித்து பூ வைத்து பொங்கல் பானையில் கட்டி வைக்கவும்.
பொங்கல் வைக்கும்போது கரும்பு, மஞ்சள், கிழங்கு வகைகள் மற்றும் காய்கறிகளை வைத்து உங்கள் குல வழக்கப்படி வழிபடவும்.
பொங்கல் வைத்த முடித்ததும் சூரியபகவானுக்கு பூஜை செய்து சாம்பிராணி, கற்பூரம் காட்டி வழிபடவும்.
பொங்கல் வழிபாடு முடிந்ததும், முதலில் இலையில் பொங்கலை வைத்து பசு, அல்லது காளை, எருதுவுக்கு உண்ண வைக்க வேண்டும். அதன்பின் மறைந்த நம் மூதாதயரை நினைத்த காக்கைக்கு வைக்க வேண்டும். அதன்பின்னரே நாம் உண்ண வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *