கடையம் அருகே வீணாகும் தாமிரபரணி குடிநீர்
1 min read
Tamirabarani water is wasted near the market.
13.1.2026
தென்காசி மாவட்டம் கடையம் அம்பை சாலையில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து ஓராண்டு காலமாக தண்ணீர் வீணாக செல்கிறது இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தென்காசி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான ராட்சச வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த வாகனங்கள் தார் சாலையில் செல்கிற போது அடிக்கடி சாலைகள் பழுதடைந்து சாலைக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகுவது தொடர்ந்து தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.
இது பற்றி பல்வேறு தரப்பினரும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் இது பற்றி புகார்கள் பலமுறை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்து பல்வேறு உயிர்கள் பலியாகி இருக்கிறது ஆனாலும் கனிம வள லாரிகளை தடுப்பதற்கு முடியவில்லை. இந்நிலையில்
தென்காசி அம்பை சாலையில் அமைந்துள்ள கடையத்தில் கடந்த ஓராண்டிற்கு முன்பு இரண்டு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு வருடமாக தாமிரபரணி குடிநீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் இது பற்றி புகார் அளிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பயனின்றி மக்களின் அடிப்படை குடிநீர் ஆதாரமான தாமிரபரணி குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.
தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் நாள்தோறும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரை சுமந்து வருகிறார்கள் மேலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ஓராண்டு காலமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடிக் கொண்டு இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து குடி தண்ணீரை பாதுகாக்கும் படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் உள்ளனர்.