June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 min read

Chief Minister M.K. Stalin witnessed the Jallikattu competition in Alanganallur.

7.1.2026
மதுரை​யில் இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்கிறது. சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். சில காளைகள், மாடுபிடி வீரர்களை தூக்கி எரிந்துவிட்டு தப்பிச்செல்கின்றன. இவ்வாறு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை கான்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது விழா மேடையில் அமர்ந்தவாறு முதல்-அமைச்சர், போட்டியை கண்டுகளித்தார்.

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார். அப்போது ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர் ராஜேஷ் என்பருக்கு தங்க மோதிரத்தை பரிசாக முதல்-அமைச்சர் அணிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *