June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பாசமுத்திரம் அருகே சித்தப்பாவை வெட்டிக் கொலை செய்த வாலிபர் கைது

1 min read

Youth arrested for hacking to death father-in-law near Ambasamudram

19.1.2026
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் சித்தப்பாவை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா, பள்ளக்கால் பொதுக்குடி,
சுப்பிரமணியபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் அம்பாசமுத்திரம் டீச்சர்ஸ் காலனியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணியளவில் சரவணன் வழக்கம்போல் அப்ப குதியில் உள்ள காங்கேயன் கால்வாய் அருகே இருக்கும் பனங்காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மனைவி பாப்பாத்தி தனது மகனை அனுப்பி தேடச் சொல்லி யுள்ளார்.

அவர் தனது நண்பருடன் அங்கு சென்று பார்த்த போது, தன்னுடைய தந்தை சரவணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். சரவணனின் இரண்டு கைகள், இடது தொடை, வலது தோள் பட்டை மற்றும் முதுகில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பாப்பாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
அப்போது சரவணன் படுகொலை செய்யப்பட்டதற் கான காரணம் தெரியாததால் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், சரவணன் வீட் டின் அருகே வசிக்கும் அவரது உறவினரான பாலமுருகன் என்பவர் அவருடன் சென்றது தெரியவந்தது.

பாலமுருகன், சரவணனின் மனைவி பாப்பாத்தியின் மூத்த சகோதரி வள்ளியம்மாளின் மகன் ஆவார். நீலகிரி, கோத்தகிரியை பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த 5 மாதங்களாக சரவணனின் வீட்டின் அருகிலேயே தங்கி வேலைசெய்து வந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் போலீசார் பாலமுருகனை பிடித்து விசாரித்தனர். விசார ணையில் பாலமுருகன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:

“நான் கடந்த 5 மாதங்களாக எனது சித்தி பாப்பாத்தி வீட்டின் அருகே தங்கி வருகிறேன். அப்போது எனது.சித்தப்பா சரவணனின் மகளை காதலித்து வந்தேன் உறவு முறைப்படி அவர் எனக்கு தங்கை முறை வேண்டும் என்பதால்,இந்த காதலுக்கு சித்தப்பா ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனாலும் நான் தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். சம்பவத்தன்று காலை சித்தப்பா சரவணன் தனியாக பனங்காட்டுப் பகுதிக்கு செல் வதைபார்த்தேன்.அவரை பின்தொடர்ந்து சென்று. மீண்டும் என் காதலை ஏற் குமாறு வற்புறுத்தினேன். அவர் இதற்கு சம்மதிக்காமல் என்னை கடுமையாக திட்டி எச்சரித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சித்தப்பா என்றும் பாராமல் அவரை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பாப்பாக்குடி போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். பின்னர் அவரை சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை பாலமுருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் பாலமுருகனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *