கடையம் அருகே காணாமல் போன மூதாட்டி கிணற்றில் பிணமாக கிடந்தார்
1 min read
Missing elderly woman found dead in well near Kadayam
21/1/2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள பிள்ளைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி பொன்னுத்தாய் (வயது 86). இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சமீப காலமாக பொன்னுத்தாய் மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பொன்னுத்தாய் கடந்த 18.01.2026 அன்று வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டதால் குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் 21.01.2026 அன்று அருகிலுள்ள கிணற்றில் பொன்னுத்தாயின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.