கடையம் ஒன்றிய மாரிகுமார் மரணம்
1 min read
Kadayam Union Marikumar Passes away
22.1.2026
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர் மாரிகுமார். இவர் தெற்குகடைத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
இவருடைய தந்தை முருகன் நகை கடை வைத்திருந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயுடன் வசித்துவந்த மாரிகுமாரி காங்கிரஸ் கட்சியில் இணைந்து சேவை செய்துவந்தார். கட்சியின் சார்பில் நடந்த பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
அவர் பொதுமக்களுடன் நெருங்கி பழகி வைத்தார். தெற்கு கடையத்தில் பல இடங்களில் சாலை வசதி செய்து கொடுத்துள்ளார். பஸ் நிலையத்தில் உயர்நிலை மின்விளக்கு அவருடைய முயற்சியின்பேரில் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் நேற்று விஷம் குடித்துவிட்டார். உடனடியாக அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் இன்று காலை பரிதாபமாக இறந்தார். அதிக கடன் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. கடையத்திலர் இன்று அவருக்கு இறுதி சடங்கு நடக்கிறது.
அவருக்கு இரண்டாது மனைவி மற்றும் குழந்தை இருக்கிறார்கள்.
மாரிகுமார் இறந்தது கடையம் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.