June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

1 min read


Tenkasi: Skill development training for children of Tamil Nadu construction workers

22/1/2026
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி உதவித்தொகை பெறும் 10000 குழந்தைகளுக்கு 40 பயிற்சி பிரிவுகளில் இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னை. தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு கீழ்கண்டவாறு நிபந்தனைகள் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் முறையான பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு. பாலிடெக்னிக் டிப்ளமோ, ஐடிஐ பயில்பவர்கள். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான உதவித்தொகை பெற்று இருக்க வேண்டும் அல்லது உதவித் தொகை பெற விண்ணப்பித்திருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளரின் இரண்டு குழந்தைகள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

மேலும் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் உயர்கல்வி உதவித்தொகை பெறும் குழந்தைகள் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளரான தங்களது தந்தை அல்லது தாயாருடன் அனைத்து அசல் ஆவணங்களுடன் தென்காசி எண்.275, கே.ஆர் காலனி பிரதான சாலையில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சி விண்ணபத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும் மேலும் விவரங்களுக்கு 04633 214606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே மேற்கண்ட பயிற்சியில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *