கூட்டு பண்ணையம் மூலம் சதனை: மழை நீரை தேக்கி 40 ஏக்கரில் இயற்கை விவசாயம்
1 min read
Growing through collective farming: Organic farming on 40 acres by harvesting rainwater
29/1/2026
தமிழ்நாடு மாணவர் இளைஞர் பண்ணையம் என்ற அமைப்பை
உருவாக்கி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள போகலூரில் கருவேல மரங்கள் அடர்ந்த பூமியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை தொங்கினர்.
முதலாம் ஆண்டு 3 வகையான பயிர்களை விதைத்து சாகுபடி செய்த நிலையில் கடந்த ஆண்டு
25 ஏக்கரில் நெல் பயிரிட்டு 166 மூடை நெல் சாகுபடி செய்தனர். தற்போது இந்தாண்டு 40 ஏக்கரில் வரப்புக்களை 5 அடி உயர்த்தி
60 ம் குருவை, பூங்கார்,ஆத்தூர் கிச்சடி, துாய மல்லி. கருப்பு கவுனி, வெள்ளை பொன்னி, தங்க சம்பா, சீரக சம்பா உள்பட 9 வகையான பயிர்களை விதைத்து உள்ளனர்.
இயற்கையான முறையில் 120 முதல் 160 நாட்கள் வரை இயற்கையான முறையில் மழைநீரை தேக்கி வளர்த்து வருகின்றனர்.தொடர்ந்து பெய்யும் மழை நீரை சேமித்து, எந்த வகையான உரங்களும் இல்லாமல் களைச்செடிகள் வளராமல் நீரின் அளவை ஒரே அளவாக வைத்து வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு நெல் ரகமும் 3 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்து நிற்கிறது.
தமிழர் வேளாண்மை மாநில ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் கூறியதாவது: –
இயற்கை விவசாயத்தில் 16 வயது முதல் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது 67 வயதாகிறது. ‘வரப்பு உயர நீர் உயரும்’, என்ற வகையில் தண்ணீரை தேக்கி மேகக் கூட்டங்களை உருவாக்கி
இயற்கையாக மழை பெய்ய வைக்க முடியும்.இதன் அடிப்படையில் பரமக்குடி, கமுதி, அருப்புக் கோட்டை என 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தமிழ் நாடு முழுவதும் இயற்கை விவசா யம் செய்து வருகிறோம். பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தமிழக இளைஞர்கள் ஒன்றிணைந்து கூட்டு பண்ணையம் அமைத்து சாதித்து வருகிறோம்.வரும் காலங்களில் அனைத்து தரப்பினரும் விதைப்பு,அறுவடை என்ற வகையில் பாதுகாப்பான உணவை தாங்களாகவே உருவாக்க முடியும் என்றார்.