June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடியில் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

1 min read

Achievement Award Ceremony in Paramakudi

20.1.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளம் உள்ளங்கள் சார்பில் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா தலைவர் வி.குணசேகரன் தலைமையில் நடந்தது.இளம் உள்ளங்கள் உறுப்பினர் எம்.நடராஜமணி, நிர்வாக உறுப்பினர் எஸ். தெட்சிணாமூர்த்தி,வாரிசு உறுப்பினர் பி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் உள்ளங்கள் செயலாளர் ச.குணசீலன் அனைவரையும் வரவேற்றார். பரமக்குடி 4 ம்வகுப்பு மாணவி எல்.மஹதி லெனின் வரவேற்பு நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

விழாவில் பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு வெங்காளூர் ஸ்ரீ கோதாவிலாஸ் பள்ளி தலைமையாசிரியை ஜி.வி. சௌமியா கேடயங்கள் வழங்கி கவுரவித்தார்.ஓய்வு பெற்ற வேளாண்மை உயர் அதிகாரி வேலாயுதம், செய்தியாளர்கள் பா.தனசேகர், மாமு ஜெயக்குமார் உள்பட நகர் முக்கிய பிரமுகர்கள், சமூக திரளாக கலந்து கொண்டனர். இளம் உள்ளங்கள் பொருளாளர் எஸ்.எம். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *