பாவூர்சத்திரம் காமராஜர் பேருந்து நிலைய அவல நிலை
1 min read
Pavurchatram Kamaraj bus stand in poor condition
6.2.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் போக்கு வரத்திற்காக பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வணிகர்கள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தை போக்கு வரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் இலவச கழிப்பிடத்திற்குள் பராமரிப்பு இல்லாமல் அங்குள்ள அறை முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது.
மேற்படி சுகாதாரமற்ற சூழ்நிலையும் கழிப்பிடத்திற்கு வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அதே பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நடமாடும் பொதுமக்கள் பெருந்தலைவர் காமராஜரை பார்த்து செல்வதற்கு கூட அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பயணிகளின் நலன் கருதி இலவச கழிப்பிடத்திற்குள் உடைந்து கிடக்கும் கழிப்பிட கோப்பைகள், கதவுகள், திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டி மற்றும் குழாய் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என சமூக ஆர்வலர்கள் ,பயணிகள் ,பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.