June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பாம்பகோவில்சந்தையில் மூதாட்டியை தாக்கி ரூ. 30 லட்சம் நகை பணம் கொள்ளை

1 min read

Elderly woman attacked in Pambakovil market, jewellery worth Rs. 30 lakhs looted

7.2.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பாம்ப கோவில் சந்தை கிராமத்தில் ஏராளமான இஸ்லாமியர்களும் குடியிருந்து வருகின்றனர் இதில்‌ பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்புலி செட்டியார் மகன் மாரியப்பன் (வயது 58). இவர் பலசரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி. இவரின் தாயார் மாரியம்மாள் (வயது 85) என்பவரும் தங்கியுள்ளார். நேற்று காலை 11 மணியளவில் வீரவநல்லூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாரியப்பனும் பார்வதியும் புறப்பட்டு சென்றனர்

மாமியார் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் அப்பொழுது பர்தா அணிந்த ஒருவர் திடீர் என மாரியப்பனின் வீட்டுக்குள் நுழைந்தார் இதை கண்டு அதிர்ச்சடைந்த மூதாட்டி மாரியம்மாள் நீங்கள் யார் என கேட்டார்.‌ ஆனால் அதற்கு பதில் அளிக்காத மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாரியம்மாளை கொடூரமாக தாக்கினார். இதனால் நிலைகுலைந்து போன மாரியம்மாள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மயக்கம் அடைந்தார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டுக்குள் இருந்த பீரோவில் மேல் வைக்கப்பட்டிருந்த சாவியை நைசாக எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த தலா ரெண்டு நெக்லஸ் கைச்செயின் மற்றும் மோதிரம் காதுமாட்டியென மொத்தம் 26 பவுன் நகை ரூபாய் 7 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளடித்து விட்டு தப்பி சென்றார் சிறிது நேரத்தில் பார்வதிக்கு மயக்கம் தணிந்த நிலையில் தனது வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வெளியே ஓடி சென்று கூச்சலிட்டார் இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர் இதுகுறித்து திருமண வீட்டுக்கு சென்ற மாரியப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர் உடனடியாக விரைந்து வந்து சொக்கம்பட்டி போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் பேரில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சிநாதன், சொக்கம்பட்டி இன்ஸ்பெக்டர் மது விக்ரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்

அதில் அந்த வீட்டில் ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த அனைத்து தடயங்களும் சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பொழுது மெயின் ரோடு காய்கறி கடையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வின் போது புர்கா அணிந்திருந்த ஒரு நபர் அந்த வீட்டுக்குள் சென்று வந்தது தெரியவந்தது .

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலையில் கொள்ளை நடைபெற்ற வீட்டு வாசலில் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது அதனை பிரித்து பார்த்தபோது அந்த வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் மற்றும் நகை இருப்பதை பார்த்து மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சொக்கம்பட்டி போலீசார் தொடர்ந்து கொள்ளைகளை வலை வீசி தேடி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *