பாளை மத்திய சிறையில் சிறை காவலரை தாக்கிய கைதியால் பரபரப்பு
1 min read
Inmate attacks prison guard in Palai Central Jail, creates stir
7.2.2026
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1,600 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை கண்காணிக்க சிறை காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறை யில் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். சமீபகாலமாக பாளையங் | கோட்டை சிறையில் கைதிகள் தற்கொலை, மோதல், கஞ்சா பறிமுதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனால் சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் கடந்த சில வாரங்களில் பலமுறை ஆய்வு மேற்கொண்டு, சிறை காவலர்களுக்கு போதிய அறிவுரை வழங்கினார்.
பாளை மத்திய சிறையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 50) என்பவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள் ளார். அவர் சிறை காவலராக பணிபுரிந்து வரும் சாம்பிரைட் என்பவரிடம் நேற்று முன்தினம் மாலையில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம், ஒரு உதவி செய்யுமாறு முத்து ராமலிங்கம் கேட்டாராம்.
அதற்கு சாம்பிரைட் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் டைந்த முத்துராமலிங்கம், சாம்பிரைட்டை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி ஆயுள் தண்டனை கைதியான ஜெபமணி என்பவரை, சிறை காவலர் முனியாண்டி விசார ணைக்காக அழைத்தபோது ஏற்ப்பட்ட கராறில், அவரை ஜெபமணி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் சிறை காவலரை, கைதி தாக்கிய சம்பவம் கடந்த 2 மாதங்களில் 2-வது முறையாக அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.