June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கமல்ஹாசன் பேசியது வருத்தம்; அண்ணாமலை பேட்டி

1 min read

Kamal Haasan’s speech is regrettable; Annamalai interview

7.2.2026
நிதியமைச்சர் சொல்ல வந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கமல்ஹாசன் ஐயாவை பொறுத்தவரை, ஒரு நல்ல நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை. கன்னி பேச்சு எங்கள் எல்லோருக்கும் வருத்தம். நிதியமைச்சர், இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர்கள் இந்த மாதிரி பேசுகிறார்கள் என்பதை கூறினார்.

நிதி அமைச்சர் சொல்லவந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டு பேசுவது எங்க எல்லோருக்கும் வருத்தம் தான். இது பார்லிமென்டில் கமலஹாசன் பார்வைக்கு சென்ற பிறகு நிச்சயமாக, தன்னை திருத்தி நான் நிதி அமைச்சரை புரிந்து கொண்டு, தவறாக பேசியதாக சொல்லுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *