June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன் சொல்கிறார்

1 min read

We did what Kamaraja couldn’t do: Durai Murugan says

7.2.2026
‘காமராஜரால் முடியாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்தோம்,” என தமிழக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்தானாவில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், மோர்தானா அணையில் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படும். நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; அதில் சந்தேகமே வேண்டாம். மற்ற வர்கள் நீரின் மேலே நடந்தாலும், நெருப்பின் மேலே நடந்தாலும், எங்கள் ஆட்சி தான் மீண்டும் அமையும். மோர்தானா அணை என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது.

முன்னாள் முதல்வர் காமராஜர், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்து முதல்வரானார். அப்போது, மோர்தானா அணையை கட்ட முயன்றார். ஆனால், நிதி இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அதன் பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்து தான், அதை கட்டினோம்; 90 அணைகளை கட்டியுள்ளோம்.தமிழகத்தில் இனி அணைகளே கட்ட தேவையில்லை எனும் அளவுக்கு போதிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *