June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 11 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி

1 min read

11 soldiers, 12 terrorists, 1 girl killed in suicide attack in Pakistan

18.2.2026
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பாஜூர் மாவட்டத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் மற்றும் 1 சிறுமி உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் செய்தி பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி 16 (திங்கள்கிழமை) இரவு வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்த பயங்கரவாதி, எல்லைப் பாதுகாப்புப் படையின் சோதனைச் சாவடி மீது மோதினான். மேலும் மறைந்திருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இந்தத் தாக்குதலில் 11 பாகிஸ்தான் வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும், இந்த அதிர்வினால் அருகே இருந்த வீடுகள் சேதமடைந்ததில் ஒரு சிறுமியும் உயிரிழந்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அன்றைய தினம் பன்னு மாவட்டத்திலும் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *