June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

வெய்க்காலிப்பட்டியில் பாஜக தெருமுனை பிரச்சார கூட்டம்

1 min read

BJP street campaign rally in Veikalipatti

20.2.2026
தென்காசி மாவட்டம், கடையம் மேற்கு ஒன்றிய பாஜகவின் சக்திகேந்திர தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கடையத்தை அடுத்த வெய்க்காலிப்பட்டியில் மாயவன் கோயில் பகுதியில் பாஜகவின் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கடையம் மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளரும் சக்திகேந்திர பொறுப்பாளருமான ஜெயக்குமார் தலைமை வகித்தார். கிளைத்தலைவர்கள் ஜெயக்குமார் குமரேசன் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பி. பிரபாகரன், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ் மற்றும் பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

அனைத்து சக்திகேந்திர பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கி நாளை நமதே தமிழ்நாடும் நமதே எனும் தலைப்பில் பரப்புரை மேற்கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *