தென்காசி: தரம் குறைந்த நகை விற்றதில் தகராறு- 3 பேர் கைது
1 min read
Tenkasi: Dispute over sale of low-quality jewelry – 3 arrested
20.2.2026
தென்காசியில் தரம் குறைந்த தங்க நகையை விற்பனை செய்த நபரிடம் நகை வேண்டாம் எனறு கூறி தனது பணத்தை திருப்பி கேட்டவரை தாக்கிய 3 பேர் கைது.
தென்காசி அம்மன் சன்னதி பஜார் பகுதியில் ஏ.ஆர்.நகைக்கடை வைத்திருப்பவர் ஹர்ஷத் இவரிடம் அதே பகுதியில் ஆயிஷா கோல்டு என்ற பெயரில் நகை கடை வைத்துள்ள ஹாலித்
ஹர்ஷத்திடம் தனக்கு வேண்டிய ஒருவர் அவருக்கு சொந்தமான தங்க நகையை 3 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். அந்த நகையை மீட்க பணம் இல்லாமல் தவித்து வருகிறார். எனவே அவர் அடகு வைத்துள்ள நகையை பணம் கொடுத்து மீட்டு அதனை நீங்களே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதன்படி ஹர்ஷத் ஹாலித் திடம் ரூபாய் 3 லட்சத்து 5 ஆயிரம் பணத்தைக் கொடுத்து அந்த நகையினை மீட்டு உள்ளார். அதில் 56 கிராம் தங்க நகை இருந்துள்ளது அதனை விலைக்கு வாங்கிய ஹர்சத் அந்த தங்க நகையினை சோதித்துப் பார்த்தபோது அது மிகவும் தரம் குறைந்த நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இது பற்றி ஹர்ஷத் ஆயிஷா கோல்டு உரிமையாளர் ஹாலித்திடம இந்த நகை தரம் குறைவாக உள்ளது.எனவே எனக்குத் தேவையில்லை நான் கொடுத்த பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார் அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது ஹாலித்துக்கு ஆதரவாக அஸ்லம், ஹாஜி ஆகியோர் ஏ.ஆர்.நகைக்கடை உரிமையாளர் ஹர்சத்தை தாக்கியுள்ளனர்.
இந்த அடிதடி சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில்
இது பற்றி தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .அதன் அடிப்படையில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து ஹாலித் அஸ்லம், ஹாஜி, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.