June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பாலாலயம்

1 min read

Theppakulam Mariamman Temple, Thoothukudi

21.2.2026
தூத்துக்குடி மேலூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாலாலயம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் கடந்த 19-ஆம் தேதி மாலை கணபதி பூஜையுடன் தொடங்கின. அன்று மாலை ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார தேவதைகளின் விமான கோபுரங்களுக்கு பாலாலய கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. (20-ஆம் தேதி) காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம் மற்றும் திருமுறை பாராயணம், மூலமந்திர ஹோமம் மற்றும் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பின்னர், ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக, மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த வைபவங்களை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சிவா மற்றும் குரு ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் ருக்மணி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பால குருசாமி, சிவன் கோவில் அறங்காவலர் ஜெயலட்சுமி முன்னாள் அறங்காவலர் அறிவழகன் மற்றும.பாஜக மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்மீகப் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் உஷா தேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் பாலாஜி, கிழக்கு மண்டல தலைவர் ராமசுப்பு மற்றும் முருகேசன், அமிர்தராஜ், ஆனந்தராஜ், மணிகண்டன், மீனாட்சிநாதன், எல்.ஐ.சி கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *