June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

விக்கிரமசிங்கபுரத்தில் 4 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

1 min read

Case registered against owner of dog that bit 4 people in Vickramasinghapuram

21.2.2026

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் விஜி (40) என்பவர் வீட்டில் வளர்த்த நாய் திடீரென தெருவில் நுழைந்து சிறுவன் உட்பட 4 பேரை நாய் கடித்துக் குதறியது.
இது தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்.
ஆறுமுக நயினார் நாயின் உரிமையாளர் விஜி மீது விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நாயின் உரிமையாளர் விஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *