கடையநல்லூர் காவல் நிலையம் அருகே பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு
1 min read
Talic chain snatched from woman near Kadayanallur police station
23.2.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற பெண்ணின் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர், செவல்விளை 3 ஆம் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் என்பவரது மனைவி மாரியம்மாள் இவர் கடையநல்லூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது கடையநல்லூர் காவல் நிலையம் அருகே அவர் நடந்து வந்த போது ஒருவர் மாரியம்மாளின் தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அப்போது மாரியம்மாள் கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த திருடனை விரட்டிச் சென்று பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த நபரை கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அந்த நபர் கடையநல்லூர், வானவர் தெருவை சேர்ந்த சேக் மைதீன் என்பவரது மகன் அருமன் காலிக் என்பது தெரியவந்தது. அந்த நபரிடம் இருந்து மாரியம்மாளின் தாலி செயினை மீட்ட போலீசார் அருமன் காலிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.