June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தன் வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தொண்டரிடம் கெஞ்சிய விஜய்

1 min read

Vijay begged the volunteer not to follow his vehicle.

23.2.2026
தவெக தலைவர் விஜய் இன்று வேலூரில் பிரசாரம் செய்தார். இதற்காக வேலூரை அடுத்த அகரம்சேரியில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வேலூருக்கு புறப்பட்டார். வழியில் காஞ்சிபுரத்தில் விஜய் பயணம் செய்வதற்காக பிரசார வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சென்றதும் விஜய் காரில் இருந்து இறங்கி வேனில் ஏறினார். பின்னர் வேனிலேயே அவர் வேலூருக்கு சென்றார்.

விஜயை பார்ப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரசார கூட்டம் நடைபெற்ற இடம் வரை ஆங்காங்கே சாலையோரம் ஏராளமான தவெக தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர். விஜய்யின் வேன் வந்ததும் அவர்கள் மீது மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

இந்தநிலையில், பொதுகூட்டம் முடிந்து பிறகு விஜய் தவெக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நான் திருப்பி இங்கு இருந்து சென்னைக்கு போகும்போது தயவு செய்து யாரும் வண்டிக்கு பின்னாடியோ, வண்டி சைடிலியோ பைக்கில் வராதீங்க உங்களை நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் நன்றி என தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து அவர் கூறிய கருத்துகளை காதில் வாங்கிகொள்ளாமல் தவெக தொண்டர்கள் வேலூர் பைபாசில் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்துவாரே சென்று சென்றனர்.

வேனில் இருந்த விஜய் தயவு செய்து யாரும் என் வண்டிக்கு பின்னாலோ அருகிலோ பைக்கில் பின் தொடர வேண்டாம் என தவெகவினரிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர்கள் பின்வாங்கி சென்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *