என்டிஏ கூட்ட அரங்கின் முகப்பில் இருந்த பெரியாரின் படத்தை அகற்றியது அதிமுக
1 min read
AIADMK removes Periyar’s portrait from the facade of the NDA meeting hall
28.2.2026
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பெரியார், அண்ணா படம் இடம்பெற்றது. பெரியாரை தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜகவின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பெரியார் படம் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது
இந்நிலையில், NDA கூட்ட அரங்கின் முகப்பில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அதிமுக அகற்றியுள்ளது. பெரியாரை கொள்கை தலைவர்களில் ஒருவராக கொண்டுள்ள அதிமுகவின் இந்த நடவடிக்கை இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.