June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பாஜக பிரச்சார கூட்டம்

1 min read

BJP campaign meeting in Kadayam

2.3.2026
கடையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதிநகரில் சக்திகேந்திரா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கடையம் மேற்கு ஒன்றிய துணை தலைவர் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மேற்கு ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலையில் மேற்கு ஒன்றிய விளையாட்டு பிரிவு தலைவர் வினோத் வரவேற்புரையாற்றினார். தென்காசி மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன், மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சங்கர நாராயணன், ஜெயக்குமார் கணேசன், ஒன்றிய பொருளாளர் காக்கும் பெருமாள், ஒன்றிய துணை தலைவர் குமரேசன், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கஜேந்திர வேல்செழியன், தன்னார்வத் தொண்டு பிரிவு மாவட்ட செயலாளர் இசக்கி ராஜ், விவசாய அணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர் அழகுராஜ், தன்னார்வ தொண்டு ஒன்றிய தலைவர் ராமராஜன், ஒபிசி அணி ஒன்றிய தலைவர் முருகன் ,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஒன்றிய தலைவர் சுரேஷ், பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மாடசாமி, பட்டியல் அணி ஒன்றிய தலைவர் மணிகண்டன், சுற்றுச்சூழல் பிரிவு ஒன்றிய தலைவர் செந்தில் கிளைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ரெங்கசாமி, சிவா, கிளைச்செயலாளர் கணேசன், அதிமுக கிளை செயலாளர் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *