June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் மக்கள் நல பேரியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

1 min read

A consultative meeting of the People’s Welfare Movement in Kadayam

2.3.2026
தென்காசி மாவட்டம், கடையத்தில் மக்கள் நல பேரியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுச் செயலாளர் கடையம் சூ.சு. சந்திரசேகர் தலைமை தாங்கினார். கடையம் ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் உலக ராஜன் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் குமார் பாண்டியன் மண்டல ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொருளாளர் சக்திவேல், மகளிர் நலப் பிரிவு செயலாளர் செல்வி, இளைஞர் நலப் பிரிவு செயலாளர் ஹெர்வின் ஜெபராஜ், கன்னியாகுமாரி மாவட்ட பொறுப்பாளர் ஜோயல், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி, சுந்தரம்மாள், இசக்கியம்மாள், மற்றும் பலர் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்கினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* தமிழக கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தி கனிம வளத்தை பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது . தமிழக கனிம வள கொள்ளையை தடுக்க குரல் கொடுக்காத போராடாத திமுக கூட்டணி கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிற விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது இதை மக்கள் நல பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது, கடுமையான சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும். போன்ற தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது கூட்ட முடிவில் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் முத்துராமன் நன்றி கூறினார்.

-ஜோசப், நிருபர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *