சங்கரன்கோவில் தொகுதி வாக்குச் சாவடிகளில் மாவட்டஆட்சியர் ஆய்வு
1 min read
District Magistrate inspects polling booths in Sankarankovil constituency‘
5.3.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி. வடக்கு குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வன்னிக்கோனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, களப்பாகுளம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி கழிவறை வசதி மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஆ.அனிதா, திருவேங்கடம் வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.