June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி பள்ளியில் காலை உணவு திட்டத்தை சேர்மன் ஆர்.சாதிர் ஆய்வு

1 min read

Chairman R. Sadhir inspects the breakfast program at Tenkasi School

9.3.2026
தென்காசி நகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் ஆய்வு மேற்கொண்டார்

தென்காசி நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் திங்கள்கிழமை காலை 8.47 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தென்காசி நகர திமுக செயலாளரும், தென்காசி நகர்மன்ற தலைவருமான ஆர்.சாதிர் கள ஆய்வு செய்தும் உணவின் தரத்தினை அறிந்தும் பள்ளியில் மாணவ செல்வங்களுடன் காலை உணவினைஅருந்தினார்.

    பள்ளியில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்ததில் உணவின் தரம் சிறப்பாக உள்ளது.
    மேலும் அங்குள்ள பள்ளி மாணவ ,மாணவிகளிடமும் ஆசிரியர்பெருமக்களிடமும் தரத்தினை கேட்டு அறிந்தும் அங்குள்ள பதிவேடுகளில் ஆய்வு செய்தபோது உணவானது மிக நன்றாக உள்ளது எனவும் உணவும் தேவையான அளவு
    தினமும் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்கள் காலை உணவு திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பள்ளி குழந்தைகள் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

    About Author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *